பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த். இந்தப் படத்திற்குப் பிறகு பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக தற்போது வலம் வருகிறார். நடிகர் சித்தார்த் தமிழ் மட்டும் என்று தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். நடிகர் சித்தார்த் நடிகை சமந்தாவை முதலில் காதலித்து வந்த நிலையில் இருவரும் சில காரணங்களுக்காக பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.

அதன் பிறகு நடிகர் சித்தார்த் தற்போது நடிகை அதிதி ராவை காதலித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சித்தார்த்தின் முதல் மனைவி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு மேக்னா என்பவரை சித்தார்த்த திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.