இந்திய சந்தையில் சீனாவின் Xiaomi நிறுவனம் அதன் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலான Xiaomi 12 Pro விற்பனையை கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 79,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்பகால சலுகையாக ஐசிஐசிஐ வங்கி மூலம் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10,000 வரை சலுகை கிடைக்கிறது. இதனால் ரூ. 69,999-க்கு ஸ்மார்ட் போனை வாங்கிக் கொள்ளலாம். இது போக உங்களுடைய பழைய Redmi மற்றும் Xiaomi ஸ்மார்ட்போன்களை மாற்றினால் ரூ. 8,000 முதல் ரூ. 12,000 வரை சலுகையும் கிடைக்கும்.
அதன் பிறகு இந்த புதிய ஸ்மார்ட்போனை முதலில் வாங்கும் 1000 நபர்களுக்கு Xiaomi 13 Pro merchandise box கிடைக்கும். இந்நிலையில் Xiaomi 13 Pro ஸ்மார்ட் போனில் 6.7 இன்ச் 2K டிஸ்ப்ளே வசதி, 12 GB Ram + 256 GB storage, மூன்று 50 MP கேமரா வசதி, 120Hz Refresh rate, dolby vision support, Snapdragon 8 Gen 2 Soc, 4820Ah Battery, 120W fast charging வசதி, 5G, 32Mp selfie camera போன்ற வசதிகள் இருக்கிறது. மேலும் இதன் கேமரா வசதி iphone மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 22 சீரிஸ் போன்றவைகளுக்கு இணையாக இருக்கும் என்பதால் ஒரு சிறிய பொருளின் கலரை கூட துல்லியமான முறையில் காண்பிக்கும். இந்த ஸ்மார்ட்போனை Mi.com, Mi Homes, Mi studio போன்ற இடங்களில் வாங்கலாம்.