உலக அளவில் பல கோடி மக்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. whatsapp செயலியில் அடிக்கடி மெட்டா நிறுவனம் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மெட்டா நிறுவனம் Spam Call-ஐ தவிர்க்கும் விதமாக ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது ஒரு whatsapp பயனரின் தொலைபேசி நம்பர் இருந்தால் போதும் அந்த நபர் தன்னுடைய போனில் நம்பரை சேமிக்காவிட்டாலும் whatsapp-ல் மெசேஜ், வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் போன்றவைகள் வரும்.

இப்படி முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் வருவது பயனர்களின் மிகப்பெரிய புகாராக இருக்கும் நிலையில் இதை தடுப்பதற்கு தற்போது மெட்டா நிறுவனம் புது அப்டேட்டை வழங்க இருக்கிறது. அதாவது உங்களுடைய whatsapp எண்ணுக்கு தெரியாத நபர்களிடமிருந்து கால் வந்தால் அந்த கால் ஆட்டோமேட்டிக்காக சைலன்ட் ஆகுமாறு புது அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஆப்ஷன் வாட்ஸ் அப் செட்டிங்ஸில் வர இருக்கிறது. இதை Enable செய்துவிட்டால் முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகள் தானாக சைலன்ட் ஆகிவிடும்.

அந்த ரிங்டோன் உங்களுக்கு கேட்கவும் செய்யாது. ஒருவேளை உங்களுக்கு அந்த அழைப்புகளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வாட்ஸ் அப் Call Log-ல் சென்று பார்த்துக் கொள்ளலாம். இது விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மேலும் இந்த புதிய வசதி வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றாலும் Spam Call-ஐ விட‌ Spam message தான் அதிக அளவில் வருவதால் இதை தடுப்பதற்கு மெட்டா நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.