சாம்சங்க் கேலக்சி எம்53 இந்திய சந்தையில் ஒரு புதுவகை ஸ்மார்ட்போன் ஆகும். இதற்கு வாடிக்கையாளர்கள் இடையில் அதிக தேவை இருக்கிறது. வாடிக்கையாளர்கள் இதனை அதிகமாக விரும்புவதற்கு இதன் அற்புதமான அம்சங்கள் மற்றும் சக்தி வாய்ந்த வடிவமைப்பு முக்கியமான காரணமாகும். சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் பெரிய தள்ளுபடியானது வழங்கப்படுகிறது.

Galaxy M53 5Gல் வாடிக்கையாளர்களுக்கு 6.7-இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே இன்பினிட்டி O Super AMOLED+ டிஸ்ப்ளே கிடைக்கும். டிஸ்ப்ளேவில் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இருக்கிறது. இந்த போனில் 4 பின்புற கேமராக்கள் இருக்கிறது. இதில் முதன்மை லென்ஸ் 108 மெகா பிக்சல்கள் ஆகும். 2-வது லென்ஸ் 8 மெகாபிக்சல்கள் அல்ட்ரா வைட், 3-வது லென்ஸ் 2 மெகாபிக்சல்கள் டெப்த் மற்றும் 4-வது லென்ஸ் 2 மெகாபிக்சல்கள் மேக்ரோ என்ற வகையில் இருக்கிறது.

பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை ரூபாய். 32,999 ஆகும். இருப்பினும் அதன் வலைத்தளத்திலிருந்து இதை வாங்கினால், இந்த போனில் ஒரு மிகப் பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடியானது நடைமுறைக்கு வந்த பின், வாடிக்கையாளர்கள் இதை மிகவும் மலிவான விலையில் வாங்கலாம். ரூபாய்.26,990 என்ற மிகக் குறைந்த விலையில் இதை வாங்க முடியும்