செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்,  ஆளுநர் என்பது அடிதட்டில்… கீழிருந்து…. மக்களோடு மக்களாக  வாழ்ந்து மேலே எழுந்து வந்த ஒரு தலைவனுக்கு கொடுத்தால்தான் சரியாக வரும். மக்களே சந்திக்கவில்லை…..  எங்கேயோ ஒரு இடத்தில் ஐபிஎஸ் ஆக இருந்தார். போலீசிலிருந்து இன்னும் வெளியே வரவில்லை… நீங்க  எப்படி பொதுமக்களை பற்றி சிந்திப்பீர்கள் ? எங்கள் பிரச்சனையை என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?

திடீரென்று ஆளுநர் பொறுப்பு ஓய்வு பெற்ற ஐஏஎஸ்-க்கு  கொடுத்து விடுவது…  ஓய்வு பெறுகின்ற நீதிபதி கொடுக்கிறது… தமிழிசைக்கு  கொடுக்கிறார்கள் என்றால், அவுங்க  போராட்டங்கள்  போய் இருக்கிறார்கள்… மக்களோடு நின்று இருக்கிறார்கள்….   வீடு தீ பிடிச்சி எறிஞ்சி இருந்தா போய் இருப்பார்கள்… வெள்ள சேதத்தை போய் பார்த்தீருப்பார்கள் ….

மக்களால் அழும் பொழுது கவலைப்படாதீங்க….   தைரியமாக இருங்கள் என்று சொல்லி இருப்பார்கள்…. ஒன்றுமே சந்திக்காமல்,  திடீரென்று உட்கார வைத்து விடுவது….  அவர் எந்த மக்களின் நலன் சார்ந்த சட்டமுமோ, திட்டமோ, தீர்மானமோ, மசோதாவோ நிறைவேற்றினால் கையெழுத்து போட முடியாது….  என்ன பெரிய கையெழுத்து ? உன்னுடைய கையெழுத்து…. என்ன கையெழுத்து ?  அது தான் எரிச்சலாக இருக்கிறது.

அமைப்பு தப்பாக இருக்கிறது… எங்கே  மக்களாட்சி இருக்கிறது ?  மக்களுக்கான அதிகாரம் எங்க இருக்கிறது ? மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சிக்கு இல்லாத அதிகாரம், ஒரு ஆளுநருக்கு வந்து விடுகிறது என்றால்,  யார் ஆளுவது ? அவர் ஆளுகிறாரா ?  முதலமைச்சர் ஆளுகிறா ? ஆளுநர் தேவை இல்லை என்று இப்ப இல்லை…  நான் நீண்ட நாளாக பேசுகிறேன்…  இவர்கள்  ஆளுநரை  மாற்ற வேண்டும் என்று சொன்னார்கள்….  நான் அந்த பதவியை தூக்க வேண்டும் என்று சொல்லுகிறோம் என தெரிவித்தார்.