அமெரிக்காவில் ஆப்கானிஸ்தானைச்  சேர்ந்த நபர், இரண்டு தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை (National Guard) சுட்டுக் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கைகளில் (Immigration Policy) மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரப் போவதாகக் கடுமையாக அறிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் தனது அதிரடியான அறிக்கையில், “அனைத்து மூன்றாம் உலக நாடுகளில் இருந்தும் குடியேற்றத்தை நிரந்தரமாக நிறுத்தி வைப்பேன்” என்று உறுதி அளித்துள்ளார்.

அத்துடன், அமெரிக்காவின் அமைதியைக் குலைப்பவர்கள், நாட்டின் சொத்தாக இல்லாதவர்கள் மற்றும் “மேற்கத்திய நாகரிகத்துடன் பொருந்தாத” (Non-compatible with Western Civilization) அனைத்து வெளிநாட்டவர்களையும் நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையான “தலைகீழ் குடியேற்றத்தை” (Reverse Migration) ஆரம்பிப்பதாகவும் அவர் சபதம் எடுத்துள்ளார்.

மேலும், அதிபர் ஜோ பிடன்  நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான சட்டவிரோதக் குடியேற்றங்களை உடனடியாக ரத்து செய்வேன் என்றும் அவர் சூளுரைத்துள்ளார். இந்தத் தாக்குதலில் வெஸ்ட் வர்ஜீனியாவைச் சேர்ந்த Spc. சாரா பெக்ஸ்ட்ரோம் என்ற தேசிய பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார்.