ஒரு பெண்ணின் கண் இமைகளில் (Eye Lashes) இருந்து 250க்கும் மேற்பட்ட பேன்களை மருத்துவர்கள் அகற்றிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது.

குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த 66 வயதான ஒரு பெண்ணின் கண் இமைகளில் இருந்து மருத்துவர் ஒருவர் 250க்கும் மேற்பட்ட பேன்களையும் 85 ஈர்களையும் அகற்றியுள்ளார்.

அந்தப் பெண் கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இரண்டு கண் இமைகளிலும் பேன்கள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அந்தப் பெண்மணி சுத்தம் பேணுவதில் கவனக்குறைவாக இருந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகித்துள்ளனர். கண்ணுக்கு அருகில் இருந்ததால், அவற்றை அகற்றுவது சவாலான காரியமாக இருந்தது.

எனினும், சிறப்பு மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், மருத்துவர்கள் மிகவும் கவனமாகச் செயல்பட்டு, பேன்கள் அனைத்தையும் வெற்றிகரமாக அகற்றினர்.இது ‘Phthiriasis Palpebrarum’ எனப்படும்.

சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பெண் குணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம், சுகாதாரத்தில் அக்கறை காட்டுவது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துவதாக உள்ளது.