அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக வெளிவந்த தகவல் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செல்லுர் ராஜு, நடிகர் விஜய் ஏராளமான படங்களில் நடித்து இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார். அவர் தாராளமாக அரசியலுக்கு வரலாம். நான்கு, ஐந்து படங்களில் நடித்த விஷாலே அரசியலுக்கு வரும்போது ஏராளமான ஹிட் படங்களை கொடுத்த விஜய் அரசியலுக்கு வரக்கூடாதா.?

விஷால் அரசியலுக்கு வந்த போது நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்றெல்லாம் சொன்னார். ஆனால் தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவருடைய கட்சி என்ன ஆனதும் என்றும் தெரியவில்லை. ஆனால் விஜய் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து நிறைய இளைஞர்களை ஈர்த்துள்ளார். மேலும் அவர் அரசியலுக்கு வருவதாக இருந்தால் தாராளமாக வரலாம். இது ஜனநாயக நாடு என்று கூறினார்.