தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது கட்சி நிர்வாகிகளுக்குக் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
வந்தவாசியில் மாவட்டச் செயலாளர் உதயகுமார் பிறந்தநாளை முன்னிட்டுச் சாலையை மறித்துக் கொண்டாட்டம் நடத்தியது சர்ச்சையான நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிறந்தநாள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
த.வெ.க மாவட்டச் செயலாளரின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியினரின் அலப்பறையால் கடும் போக்குவரத்து நெரிசல்.. கையில் கத்தியை வைத்து கொண்டு போஸ் கொடுத்த மாவட்டச் செயலாளர்..#Tiruvannamalai | #TVK | #Birthday | #Celebration | #Police | #Traffic pic.twitter.com/QGT7SRLV7k
— Polimer News (@polimernews) February 11, 2026
“>
இந்த உத்தரவை மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புஸ்ஸி ஆனந்த் எக்ஸ் (X) தளத்தில் கறாராகத் தெரிவித்துள்ளார்.
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தங்களின் பிறந்தநாள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் போது, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு நடத்த வேண்டும். இதை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை…
— N Anand (@BussyAnand) February 11, 2026
“>
