மேற்குவங்க மாநிலத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் பிரசாந்த் குமார் மண்டல் என்பவருக்கும் அவருடைய மனைவி ஜார்னாவுக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஜார்னா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது ஜார்னா தன்னுடைய கணவர் தன்னுடன் வந்து தனிக்குடித்தனம் நடத்த வேண்டும் என விரும்பியுள்ளார். இதற்காக தன் கணவரை பெற்றோரை பிரிந்து வருமாறு ஜார்னா அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இதனால் பிரசாந்த் குமார் மண்டல் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒரு மகன் தன் பெற்றோருடன் வசிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்று. ஆனால் ஒரு கணவரை எந்த ஒரு காரணமும் இல்லாமல் பெற்றோரை பிரிந்து வரும்மாறு கூறி மனைவி கட்டாயப்படுத்தினால் அது ‌ மனதளவில் கொடுமைப்படுத்துதலுக்கு சமமாகும். இது போன்ற பிரச்சனைகளில் கணவர் விவாகரத்துக்கு கோருவதற்கு அனைத்து விதமான உரிமைகளும் அவருக்கு இருக்கிறது என்று நீதிபதி கூறினார். மேலும் ஜார்னா மற்றும் பிரசாந்த் குமார் மண்டல் ஆகியோரின் விவாகரத்து செல்லுபடி ஆகும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.