
செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், பொது இடத்தில் புகை பிடிக்கக் கூடாது என்று சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி, குட்காவை இந்தியாவிலிருந்து தடை செய்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி, புகையிலை பொருட்கள் எச்சரிக்கை விளம்பரங்களை கொண்டு வந்தது பாட்டாளி மக்கள் கட்சி, இந்தியாவிலேயே 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்தது பாட்டாளி மக்கள் கட்சி.
உலகத்தில் மிகப்பெரிய சுகாதார திட்டம் என்று இந்தியாவிலே தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தை கொண்டு வந்தது பாட்டாளி மக்கள் கட்சி, FSSAI ( Food Safety and Standards Act of India ) என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்தது பாட்டாளி மக்கள் கட்சி, இந்தியாவில் போலியோவை ஒழித்தது பாட்டாளி மக்கள் கட்சி. தமிழ்நாட்டில் பாத்தீங்கன்னா… ஜிப்மரை தன்னாட்சி நிறுவனமா கொண்டு வந்தது பாட்டாளி மக்கள் கட்சி,
தமிழ்நாட்டில் இன்னைக்கு ஒரு மீட்டர் கூட இல்லாமல் அத்தனையும், பிராட்கேஜாக ரயில்வே திட்டத்தில் புரட்சி செய்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி, சேலம் ரயில்வே கோட்டத்தை கொண்டு வந்தது பாட்டாளி மக்கள் கட்சி, சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வந்தது…. மதுரையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வந்தது….
காவிரி – டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க செய்தது பாட்டாளி மக்கள் கட்சி, இப்படி பல புரட்சிகளையும், சாதனைகளையும், மக்கள் சார்ந்த திட்டங்களையும் கொண்டு வந்தது. கொண்டுவர செய்தது, பல கொள்கை முடிவுகளை மாற்றி அமைத்தது பாட்டாளி மக்கள் கட்சி. இதுதான் ஒரு கட்சியின் உண்மையான வேலைகள்.
யாராவது கட்சி தொடங்கினார்கள் என்றால், இது போன்ற சாதனைகளை செய்ய வேண்டும். விஜய் அவர்கள் கட்சி தொடங்குவதற்கு எங்களுடைய வாழ்த்துக்களை நாங்கள் தெரிவிக்கின்றோம். நல்ல கொள்கை முடிவு, ஐடியாலஜி என்ன ? மக்களை சார்ந்த நல்ல திட்டங்கள் என்னென்ன ? என்று அவர் முன் வைத்து, நல்ல முறையிலே மக்களை சார்ந்த திட்டங்கள் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.