திமுக மாநாட்டில் கலைஞரின் பேணா என்ற தலைப்பில் பேசிய கரு. பழனியப்பன், அண்ணா அவர்கள் சொல்வார்கள்…. நான்  குறுகிய காலம் தான்  இருந்தேன். சில காரியங்கள் செய்திருக்கிறேன் என்று அண்ணா ஒன்று சொல்வார்கள்.  என்னென்ன..?  தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது,  தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை,  எப்பொழுதும் இந்தி  வர முடியாது. ஆங்கிலமும்,  தமிழும் தான்….  மூன்றாவது சுயமரியாதை திருமணத்தை சட்டம்னு கொண்டு வந்தது.

இந்த மூன்றில் எவராவது,  எப்பொழுதாவது கைவைக்க நினைத்தால் ?  உங்கள் மனதில் ஒரு பயம் வரும் அல்லவா..?  அதுவரை இந்த நாட்டை அண்ணா ஆளுகிறார் என்று தான் பொருள் என்று சொல்லுவர். அந்த மாதிரி நம்ம தலைவர் ஸ்டாலின் அவர்கள் கொண்டுவந்த மகளிர் உதவி த்தொகைவோ, புதுமைப்பெண் திட்டத்தையோ அல்லது பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தையோ என்றாவது யாராவது மாற்ற நினைத்தால்,  மனசுக்குள் ஒரு பயம் வரும் இல்லையா… 

அந்த நாள் வரை இந்த நாட்டை ஸ்டாலின் ஆளுகிறார் என்று தான் பொருள். அதற்கு அப்புறம் எவரும் மாறலாம். அப்போ அங்கிருந்து இன்றைக்கு இளைஞர் அணி ஏன் அவ்வளவு முக்கியமானதாக இருக்கின்றது ? என்று  நான் நினைக்கிறேன் அப்படின்னா….. திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றில் தான் முதியவர்களும்,  சீனியர்களும்,  ஜூனியர்களும் ஒன்றாக  கையாளுவது…  கட்சியில் இருப்பது என்பது,  இந்த கட்சிக்கு மட்டுமே ஒரு தனி குணம் என்று நான் நம்புகிறேன்.

இன்னைக்கு மாண்புமிகு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் காலையில் ஒரு ட்விட்  போட்டிருந்தாரு. என்னன்னா….  எங்களை வளர்த்தெடுத்த இளைஞர் அணி மாநாடு, இன்று ஓன்று கூடுவோம்  அப்படின்னு போட்டிருந்தார்.  அந்த வளர்த்தெடுத்து அப்படிங்கற வார்த்தை எனக்கு அவ்வளவு பிடிச்சு இருந்தது என் பேசினார்.