மதுரை வலையங்குளத்தில் நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களும் பேசினர். அதில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு பொதுக்குழுவிலேயே நாங்கள் எல்லாம் தீர்மானம் நிறைவேற்றி தம்பி சி.வி சண்முகத்திடம் கொடுத்தோம். அதிலே ஒருங்கிணைப்பாளர் பதவி ஒழிக்கப்பட்டு,  இடைக்கால பொதுச் செயலாளராக அண்ணன் எடப்பாடியார் அவர்களை தேர்ந்தெடுத்தோம். பிறகு நிரந்தர பொது செயலாளர், இப்போ உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அத்தனையுமே மாண்புமிகு எடப்பாடிதான் இந்த கட்சிக்கு தலைவர் என்று சொல்லியிருக்கிறார்கள்.

நாம் இந்த செய்தியை இரண்டு மாதமாக தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்று இந்த நிகழ்ச்சியை நடத்தினோம். இன்றைக்கு  திருநெல்வேலி வரை மதுரையிலிருந்து எங்களுக்கு ஆதரவு இல்லை,  எடப்பாடியாருக்கு ஆதரவில்லை என்று சொன்னார்கள். ஆனால் திருநெல்வேலி,  கோயம்புத்தூர்,  தூத்துக்குடி என எல்லா மண்ணிலிருந்தும் எடப்பாடிக்கு தான எங்கள் ஆதரவு என்பது இன்றைக்கு நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் தோழர்களே.

நம்முடைய   எடப்பாடியார் அவர்கள் எதிர்ப்பவர்களுக்கு நான் கேட்க விரும்புகிறேன். அரசியல் ஆளுமை இருந்தால், இதே மாநாட்டை,  இதே மதுரையில் நீங்கள் எங்களுக்கு செய்து காட்டு. இதே போன்ற ஒரு மாநாட்டை நடத்திவிட்டால் ? நாங்கள் அரசியலை விட்டே போகிறோம். நம்முடைய அத்தனை முயற்சியும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு –  சட்டமன்றத் தேர்தல் வந்தால் நம்முடைய முதலமைச்சராக மாண்புமிகு எடப்பாடியார் வரவேண்டும்,  வர அவருக்கு உழைக்க வேண்டும் என்று நன்றி கூறி முடிக்கின்றேன் என தெரிவித்தார்.