
இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் ஜங்க பூஜா என்பவர் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய நிலையில் தேர்ச்சி பெறவில்லை. இதை தொடர்ந்து சிறப்பு வகுப்பில் பயிற்சி பெற்று வந்த இவர் இந்த வருடம் தேர்வை எழுதினார். பின்னர் வீட்டிற்கு வந்து மதிப்பெண்களை சரிபார்த்த போது எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காது என எண்ணினார். இதனால் மணமடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப் போன்று தெலுங்கானா மாநில த்தின் அடிலாபாத் மாவட்டத்தில் வசித்து வரும் ராயி மனோஜ் குமார் என்பவர் நீட் தேர்வை சரியாக எழுதாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுத்து நிறுத்துவதற்காக உதவி செல்போன் எண்களை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
மேலும் இந்த செல்போன் எண்கள் மூலம் மாணவர்கள் மனநல நிபுணரை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்றும் தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.