
செய்தியாளர்களிடம் பேசிய மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தலைவர் MGR மறைந்த சமயத்துல இவங்க 30 நாள் C.M ஆக்குறாங்க அந்த அம்மாவை….. அந்த அம்மா மேல தப்பு இல்ல. ஆனால் நிறைய விஷயம் அந்த அம்மாவும் என்கிட்ட சொல்லி இருக்காங்க. மத்தவங்க, கூட இருக்க மந்திரிகளுக்குள் நான் C.M ஆகணும்…. நீ C.M ஆகணும்ன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி. போட்டி வரும் பொழுது என்னாகுது? அந்த அம்மாவை தேர்ந்தெடுக்குறாங்க… அந்த போட்டியினால் அந்த அம்மா தேர்ந்தெடுக்கப்படுறாங்க.
இல்லேன்னா எடுக்கப்பட்டிருக்க மாட்டாங்க. எடுத்துட்டு அந்த அம்மாவை உட்கார வைக்கிறாங்க… கடைசில என்ன ஆச்சு ? ஒன்னும் ஆகல. ஏன்னா தொண்டர்களும் சரி, பொதுமக்களும் சரி, அம்மாவ தான் விரும்புனாங்க. அதன் பிறகு நாங்க பல போராட்டங்களை சந்தித்தோம். ரொம்ப கஷ்டப்பட்டு, எதுக்காக அப்படின்னா….. அந்த இயக்கத்தை நல்லபடியா கொண்டு போகணும் அப்படிங்கறதுதான் நான் சின்ன வயசிலேயே எனக்கு அந்த மனப்பக்குவம் வந்துருச்சு. என்னை யாராலயும் மாற்றவும் முடியல.
எங்க நீங்க ஒத்துக்குங்க. அம்மாவுக்கு அவங்க தான் MPயா இருக்காங்களே.. இருக்கட்டும் பாத்துக்கலாம்னு சொன்னாங்க. நான் யாருகிட்டயும் பேசல. நான் எப்போதுமே ரொம்ப பேசுறதும் இல்லை. நான் பாட்டுக்கு செயலில் இறங்கிடுவேன். ஏன்னா அங்க பேசுற நேரம் வேஸ்ட் அப்படின்னு நினைக்கிற ஆளு நான். இப்ப மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு வச்சுக்கோங்க… நான் நேரடியா மக்களை பார்த்து போய்டுவேன். எனக்கு ஷூட்டிங் தேவையில்லை, அது தேவையில்லை, இதெல்லாம் ஒண்ணுமே தேவையில்லை என தெரிவித்தார்.