காட்டில் வாழும் விலங்குகளுக்கு இடையே நடக்கும் போராட்டங்கள் எப்போதுமே சுவாரசியமானவை. ஆனால், தண்ணீருக்கு ராஜாவாகக் கருதப்படும் முதலையையே அதன் இடத்திற்கே சென்று ஒரு விலங்கு வேட்டையாடினால் எப்படியிருக்கும்? அப்படியொரு அதிரடி வீடியோதான் இப்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு ஜாகுவார் புலி ஆற்றின் கரையில் மிக அமைதியாகப் பதுங்கி இருப்பதைப் பார்க்கலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Prompt Play (@promptplay1)

ஆற்றுக்குள் ஒரு முதலை அசைவற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த நொடி, மின்னல் வேகத்தில் தண்ணீருக்குள் பாய்ந்த ஜாகுவார், முதலையின் கழுத்தைப் பிடித்து ஒரே கவ்வாகக் கவ்வியது.

முதலையிடம் இருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பைக் கூட கொடுக்காமல், அதன் கழுத்தை இறுக்கியபடி தண்ணீருக்கு வெளியே இழுத்து வந்து கரையில் போட்டது. ஜாகுவாரின் இந்த அசுர வேகத்தையும், அபாரமான வேட்டைத் திறனையும் பார்த்த நெட்டிசன்கள், “நிஜமாவே இது சாத்தியமா?” என வியப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.