உணவு டெலிவரி செய்யும் ஒரு நிறுவனம், லாபத்தை மட்டும் பார்க்காமல் தனது ஊழியர்களின் நலனிலும் எவ்வளவு அக்கறை காட்டுகிறது என்பதற்கு இந்த வைரல் வீடியோ ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு வாடிக்கையாளர் ஜொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சில நிமிடங்களில் அவருக்கு ஜொமேட்டோவிடமிருந்து ஒரு தானியங்கி அழைப்பு (Automated Call) வந்துள்ளது.
A man ordered food from Zomato, the delivery rider was disabled so he received an automated call when the rider reached his location, asking him to come down and pick up the order.
Great initiative by Zomato 🫡 pic.twitter.com/DThPfrvbQf
— Lakshay Mehta (@lakshaymehta08) January 21, 2026
அதில், “உங்களுக்கு உணவு வழங்க வரும் டெலிவரி ஊழியர் ஒரு மாற்றுத்திறனாளி. எனவே, தயவுசெய்து நீங்கள் கீழே வந்து உணவைப் பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று கண்ணியமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதைக் கேட்ட அந்த வாடிக்கையாளர், ஜொமேட்டோவின் இந்த உள்ளடக்கிய (Inclusive) அணுகுமுறையையும், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதோடு அவர்களது சிரமத்தைப் புரிந்துகொண்டு தொழில்நுட்பத்தை வடிவமைத்த தீபிந்தர் கோயலையும் பாராட்டி சல்யூட் அடித்துள்ளார்.
