நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, நான் இந்திய மக்களுக்கு இந்த கமெண்டியா கூட்டணியின் பொருளாதார கொள்கைகளைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். இந்த கமெண்ட்டியா கூட்டணி நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள், நாம் வளர்ச்சி அடைய கூடாது என்று நினைக்கிறார்கள். எந்த முறையில் அரசு நிதியிலிருந்து இலவசங்களை வழங்கி…  வாக்குகளை பெற இவர்கள் நினைக்கிறார்கள்.

இது போன்ற செய்த உலக நாடுகள் எல்லாம் இப்போது என்ன ஆகி உள்ளது என்று பாருங்கள் ? இவர்களை திருத்தும் கடமையை தேசம் செய்யும். இந்த வகை செயல்களுக்கான தாக்கம் நமது நாட்டிலும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களின் மீது ராஜியங்களில் புதிய புதிய சுமைகள் தலையில் வைக்கப்படுகின்றன.  இவர்களுடைய இந்த ஆணவக் கூட்டணியின் பொருளாதாரக் கொள்கைகளின் முடிவு என்னவாக இருக்கும் என்று நான் பார்க்கிறேன் ?

இவர்களது பொருளாதார கொள்கைகள் நாட்டை திவால் ஆக்குவதில் நிச்சயம் கை கொடுக்கும். பொருளாதாரத்தை சீர்குலைக்கின்ற….  மூழ்கடிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார்கள். மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே… இவர்கள் எப்போதும் இந்தியாவுக்கு முதல் மூன்று பொருளாதாரம் உத்திரவாதம் அளிக்க முடியாது. ஆனால்மோடி  அந்த உத்தரவாதத்தை அளிக்கிறேன். நான் இந்தியாவை முதல் மூன்று பொருளாதார நாட்டில் ஒன்றாக கொண்டு வருவேன் என தெரிவித்தார்.