செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, கர்நாடகா நீர் விவகாரம் தொடர்பாக  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கிற வரை இதுபோன்ற பிரச்சனைகள்  அண்ணன் எடப்பாடி – அம்மாவால் சமாளிக்கப்பட்டு டெல்டா பகுதி மக்களுக்கு கடந்த காலங்களில் இதுவரை எந்த பிரச்சினையும் பெரிதான பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு மிகப்பெரிய பிரச்சனை..

முறையாக திட்டமிடாத காரணத்தால் –  உரிய முறையில் அனுகாத காரணத்தால்…  இன்றைக்கு நீதிமன்றத்தில் இருந்து பெறவேண்டிய ஆதரவை உடனடியாக நீதிமன்றத்தில் பெறாத காரணத்தால்… இந்த அரசின் நிர்வாக திறமையிண்மையின் காரணமாக….  ஸ்டாலினின் திறமையின்மை காரணமாக இன்றைக்கு டெல்டா பகுதிகள் பாதியில நிக்குது. அரைகுறையாக பயிர்கள் நிற்கின்றன.

மேட்டூரில் அவசரப்பட்டு,  சரியான நேரத்தில் நீரை திறக்கின்றோம் என்ற போர்வையிலே கருணாநிதி மகன் ஸ்டாலினே திறந்து வைத்தார். 12ஆம் தேதி திறந்து வைத்தார். ஆனால் உரிய காலத்தில் இந்த தண்ணீர் போய் சேரவில்லை. தண்ணீர் முன்கூட்டி போய் சேர வேண்டும் என்று திட்டமிடப்பட வேண்டிய தீர்க்கதரிசனம் அவருக்கு இல்லை.

தண்ணீரை எப்படி பெற வேண்டும் என்று ஆர்வமில்லை. தமிழ் நாட்டை பொறுத்த வரைக்கும் அண்ணா திமுக ஏனைய கட்சிகள் காவியிலே  தண்ணீரை பெற வேண்டும் என்று ஆர்வம் இருக்கின்றது.  அந்த ஆர்வத்தை செயல்படுத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. அந்த வகையில் தமிழக அரசு இன்றைக்கும் முற்றிலும் தோற்றுப் போயிருக்கிறது.

காவேரி நீரை முறையாக உரிய காலகட்டத்தில் கொண்டு வருவதற்கு   இயலாமல்….  ஸ்டாலின் அரசு பல்வேறு வகையில் தோற்று போய்  இருக்கிறது. அதேபோன்று டெல்டா பகுதி மக்களை வாழ வைப்பதிலும் தோற்றுப் போய் இருக்கின்றது. டெல்டா பகுதி விவசாயிகளை

வாழ வைக்க முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதை விட நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை வந்திருக்கிறது. இது குறித்து இன்னும் அவர்கள் எந்த செய்தியும் கூட சொல்லவில்லை. இதற்கான இழப்பிடா ? இதற்கான உதவியா ? இல்ல,  தண்ணீர் வருமா ? என இந்த அரசு சரியான கொள்கை முடிவுகளை இதுவரை அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.