சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரகாஷ்ராஜ், நிறைய படப்பிடிப்பை பார்த்துள்ளேன், கன்னியாகுமரி படப்பிடிப்பில் அவரே (பிரதமர் மோடி) எல்லாரையும் அழைத்துக் கொண்டு செல்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே அவர்தான். ஜூன் நான்காம் தேதிக்கான தமிழகத்தின் முடிவு தெரிந்து விட்டது. இங்கு யாருடைய வாழும் ஆடாது, மேலும் மத்தியில் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று நம்புகிறேன். அப்படி தான் தெரிகிறது. தோற்றுப் போவதற்கான அனைத்து வேலைகளையும் அவர்(மோடி) செய்துவிட்டார் என நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்
