தற்போதுச் சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால், பலர் உணவைச் சாப்பிடுவதைவிட, அதனைப் புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ‘ஃபுட் ஃபோட்டோகிராஃபி’ (Food Photography) மோகத்தால், உணவகத்தில் ஒரு பெண் வேடிக்கையான விபத்தில் சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஒரு உணவகத்தில் உணவு வந்ததும், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்காக, அந்தப் பெண் சீட்டின் மீது ஏறி வித்தியாசமான கோணங்களில் உணவுப் படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்.

அந்தப் பெண்மணி, பிளேட்டுகளைச் சரிசெய்து, படங்களை எடுக்கத் தடுமாறிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவரது கால் தவறி, சீட்டிலிருந்து கீழே விழுந்தார்.

அப்போது, மேஜை மீது இருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் அவர் மீதே கொட்டின. இந்த விபத்தில் அவருக்குப் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், இதைப் பார்த்த உணவகத்தில் இருந்தவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் கலகலத்தனர்.

இந்த விபத்து சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், இந்த வீடியோவுக்குக் கருத்து தெரிவித்த இணையவாசிகள், “போட்டோ எடுக்கும் வெறி இப்படித்தான் ஆகும்”, “இவர்களுக்கு இதுதான் சரியான தண்டனை” என்று வேடிக்கையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.