
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தொழிற்பள்ளிகளில் 2023 – 2024- ஆம் கல்வியாண்டிற்கான புதிய தொழில் பிரிவுகள் (ஐ.டி.ஐ) தொடங்குதல், தொடர் அங்கீகாரம் பெறுதல், தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தான் விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழில் பிரிவுகள் கூடுதல் அலகுகளுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் ஒரே விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும். தொழில் பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.5000 மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8000 ஆகியவற்றை RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது பற்றிய விவரங்களுக்கு இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.