கோவில்பட்டி-கடம்பூர் இடையே அமைக்கப்பட்டிருக்கும் புதிய இரட்டை பாதையில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டி கடம்பூர் ரயில் நிலையம் இடையே 22 கிலோமீட்டர் தூரம் மின்மய இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்ற நிலையில் தெற்கு ரயில்வே தலைமை முதன்மை பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா ஆய்வு செய்தார். கோவில்பட்டி கடம்பூர் புதிய மின்மய இரட்டை ரயில் பாதையை ஆய்வு செய்ய தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அதிவேக சோதனை ரயிலில் கோவில்பட்டிக்கு வந்தார்.

மேலும் அவருடன் அதிகாரிகளும் வந்தார்கள். நேற்று காலை 10.10 மணிக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து கடம்பூர் ரயில் நிலையம் வரை ஆய்வு செய்தார். அவரை அடுத்து ஆறு மோட்டார் ட்ராலியில் அதிகாரிகள், இன்ஜினியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரும் சென்றார்கள். இந்த ஆய்வின் காரணமாக ரயில் பாதையில் பொதுமக்கள். ரயில் பாதை அருகே வசிப்பவர்கள் நடமாட தடையை விதிக்க பட்டது. இந்த ஆய்வு மதியம் 1:30 மணிக்கு நிறைவு பெற்றது.