இந்தியா கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வெளியேறினார். தற்போது அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், INDIA என்ற பெயரில் இருக்கக்கூடிய NDA  பாஜக கூட்டணியின் பெயர். எனவே அந்த  பெயர் தனக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை என்பதை அவர் சொல்லி உள்ளார். இருந்தாலும் கூட மற்ற  கட்சிகள் குறிப்பாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அந்த பெயரை வரவேற்றுளர்கள்.  இந்த காரணத்தை தான் அவர் தற்போது வெளிப்படையாகவே சொல்லி இருக்கின்றார்.

இந்த பெயர் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை. அதனால் நான் இந்த கூட்டத்தில் இருந்து வெளியேறும் முடிவு எடுத்திருக்கிறேன் என்ற விஷயத்தையும் சொல்லியிருக்கிறார்.  பெயர் மாற்றத்திற்கு நான் பலமுறை வலியுறுத்தினேன்,  ஹிந்தி மொழி சார்ந்த அவரது நிலைப்பாடு, அதேபோல மம்தா பானர்ஜி உள்ளிட்ட மற்ற தலைவர்களை கூட்டணியில் இருக்கக்கூடியவர்கள் முன்னெடுத்துச் செல்வது,

ராகுல் காந்தியின் வார்த்தைகள்,  செயல்பாடுகள் போன்ற பல்வேறு விஷயங்களுக்கும் அவர் தொடர்ச்சியாக  அதிருப்தி தெரிவித்து இருந்ததை தற்போது வெளிப்படையாக சொல்லி உள்ளார். இவை அனைத்தும்  ஒட்டுமொத்த வெளிப்பாடாகத்தான் தற்போது கூட்டணியில் இருந்து அவர்  வெளியேறி இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இது மிக முக்கியமான விஷயம். இந்த கூட்டணியை அமைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்து மிகவும் முக்கியமான வேலைகள் செய்தவர் நிதிஷ்குமார் தான். தற்போது அவரது வெளியே சென்றது,  இந்த கூட்டணி முழுமையாக உடைமோ ? என்ற கேள்வியும் எழுகிறது.