
பாமாக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யாறு பகுதியில் சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரில், 2700 ஏக்கர் பட்டா விளைநிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. இதை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. சிப்காட் தொழிற்சாலை நமக்கு தேவை. அதில் மாற்று கருத்து கிடையாது.
வேலைவாய்ப்பு நமக்கு தேவை. பொருளாதார முன்னேற்றம் நமக்கு தேவை. அதுவும், திருவண்ணாமலை மாவட்டம், மிக மிக, பின்தங்கிய ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தில் முன்னேற்றம் வேண்டும். ஆனால், விளைநிலங்களை அழித்து, விவசாய நிலங்களை அழித்து, எங்களுக்கு தொழிற்சாலைகள் வேண்டாம், எங்களுக்கு வேலை வாய்ப்புகள் வேண்டாம். அது முன்னேற்றம் என்று கிடையாது.
விவசாயத்தை அழித்து, அல்லது சுற்றுச்சூழலை அழித்து, நீங்கள் கொண்டு வருகின்ற அந்த முன்னேற்றம், அது முன்னேற்றம் கிடையாது. அது மக்களுக்கு துரோகம், விவசாயிகளுக்கு துரோகம், தமிழ்நாட்டிற்கு துரோகமாக தான் நான் பார்க்கின்றேன். நானும் உலகம் முழுவதும், நான் சென்றிருக்கின்றேன். உலகத்தில் உள்ள, முன்னேறிய நாடுகளுக்கு நான் சென்று இருக்கின்றேன். பின் தங்கிய நாடுகளுக்கு சென்று இருக்கின்றேன்.
இந்தியாவில் உள்ள பல அனைத்து மாநிலங்களுக்கும் நான் சென்று இருக்கின்றேன். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து, மாவட்டத்துக்கும் நான் சென்று இருக்கின்றேன். முன்னேற்றம் என்றால் எனக்கு நன்றாக தெரியும். முன்னேற்றம் எப்படி இருக்க வேண்டும், என்று எங்களுக்கு நன்றாக தெரியும். நீங்க, இத எங்களுக்கு சொல்லிக் கொடுக்க அவசியம் கிடையாது. ஆனால், விளைநிலங்களை அழித்து, விவசாய நிலங்களை அழித்து, முன்னேற்றம் என்று சொல்வதெல்லாம், அது ஏமாற்று வேலை. அது, அதை கண்டிக்கின்றேன் என தெரிவித்தார்.