கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் நுண்கடன் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அதோடு பாலகங்காதர்நாத் என்ற சுவாமியிடம் கல்வி பயின்றார். அதுவே அவருக்கு ஆன்மீகம் மீது அதிக ஈர்ப்பை கொடுத்துள்ளது. முதலில் இவர் கோட்டில் எழுத்தாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பிறகு கர்நாடகா அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்று, தாசில்தாராக வேலை பார்த்துள்ளார். அந்த சமயத்தில் இவர் நாகமங்களாவில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்தில் தீட்சை பெற்றார்.
இதனால் அவருக்கு நிஷ்சலானந்தநாத் என்று பெயரிடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை சமாதானம் செய்து முடிவை மாற்ற வைத்தனர். இருப்பினும் அவர் அந்த முடிவில் இருந்து மாறவில்லை. தொடர்ந்து 12 ஆண்டுகளாக அரசு பணியாற்றி வந்த இவர், தற்போது துறவறம் மேற்கொள்ள இருப்பதாக திட்டமிட்டுள்ளார். இவர் தற்போது மண்டியா மாவட்ட கூடுதல் கலெக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது அரசு வேலையெல்லாம் உதறி தள்ளி விட்டு துறவறம் செல்ல இருப்பதாக கூறுகிறார். இச்சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சிரியமாக பேசப்பட்டு வருகிறது.