உணவு மளிகை பொருள் டெலிவரி செய்யும் நிறுவனமான ZEPTO நிறுவனத்தின் சிஇஓ ஆதித் சமீபத்தில் கிரிப்டில்ஸ் சிஇஓ தர்ஸ் குப்தாவின் பதிவை தனது சமூகப் பக்கத்தில் பகிர்ந்தார். அதைத்தொடர்ந்து அந்தப் பதிவு பெரும் விவாதமானது. இதுகுறித்து இணையதளவாசி ஒருவர் ரெட்டிட் என்பவர் “நான் ஒரு வருட காலமாக வேலை செய்தேன். அந்தப் பணி மிகவும் டாக்சிக்காக உள்ளது. சி ஆதித் எப்பொழுதுமே மதியத்தில் தான் வேலையை ஆரம்பிப்பார். ஏனெனில் அவரால் காலை எழுந்திருக்க முடியாதாம். இதனால் மீட்டிங் எல்லாமே இரவு 2 மணிக்கு நடத்தப்படும். எந்த மீட்டிங்கும் சொன்ன நேரத்தில் நடப்பதில்லை நேரம் மாற்றப்படும் அல்லது தள்ளி வைக்கப்படும். மேல் அதிகாரிகளால் ஊழியர்களுக்கு பெரும் அவஸ்தையாக இருக்கும்.
இளைஞர்களை வேலைக்கு எடுக்க விரும்புவது ஏனெனில் வயதானவர்களால் 14 மணி நேரம் வேலையை செய்ய முடியாது என்பதால் மட்டுமே ஆகும். செப்டோ நிறுவனத்தின் மூலம் டெலிவரி செய்யப்படும் பொருள்களுக்கு பல்வேறு முறையில் பணம் பறிக்க செயல்முறைகள் உள்ளன. இளைஞர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க முன் வருவதால் தற்போது இந்த நிறுவனத்தில் பணிநீக்கம் அதிகமாக செய்யப்படும் என தனது கோபத்தை பதிவு செய்திருந்தார். இதுகுறித்து பதில் அளித்துள்ள சிஇஓ ஆதித் தெரிவித்ததாவது, நான் சிஇஓ தர்ஷ் குப்தாவின் கருத்தை மட்டுமே பதிவு செய்தேன். அது என்னுடைய கருத்து அல்ல. நான் வொர்க் லைஃப் பேலன்ஸ் எதிரானவன் அல்ல. ஊழியர்களுக்கும் சமநிலை வாழ்க்கை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து தான் வலியுறுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்