விவசாயிகள் பயிறுகளுக்கு குறைந்தபட்ச விலையை சட்டப்பூர்வமாக்க கோரி பிப்ரவரி முதல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசை குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் விமர்சித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை நோக்கி, அமைச்சரே உங்கள் முன் இருந்த விவசாயிகளுக்கு ஏதாவது வாக்குறுதிகள் கொடுத்தீர்களா? அப்படி கொடுத்திருந்தால் அது என்ன ஆனது? இது ஒரு தீவிரமான பிரச்சனை. அவர்களின் பொறுமையை சோதிக்காதீர், அவர்களை ஒருபோதும் நாம் அடக்க முடியாது. இன்னும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தாதது எதற்கு? இதுவே என்னுடைய கவலை.

சர்தார் படேல் இந்தியாவை ஒருங்கிணைத்தார், அதேபோன்று நீங்களும் விவசாயிகளின் கவலைகளை நீர்க்க வேண்டும். நீங்கள் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். சர்தார் படேலின்தேச ஒருங்கிணைப்பு மற்றும் பொறுப்பையும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன். அவர் சிறப்பாக செய்தார், இன்று இந்த சவால் உங்கள் முன் வந்துள்ளது. இங்கே என்ன நடக்கிறது, ஏன் விவசாயிகள் வேதனையில் இருக்கின்றனர். இதை இலகுவாக எடுத்துக் கொள்வது நமது கொள்கையை சரியான பாதையில் வகுக்க வில்லை என்பதை குறிக்கிறது. விவசாயிகளின் பொறுமையை சோதித்தால் தேசம் பெரும் விலையை கொடுக்க நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.