நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், என் தம்பி துரை கேட்டான் ?  எங்கடா நமக்கு சிலை ? ஒரே ராத்திரில எல்லா சிலையும் குட்டி சாக்குல கட்டி நான்  போடல… நீ பாத்துட்டே இரு… திரும்பின திசையெல்லாம் தமிழ் பேரின அடையாளங்கள்…  சென்னையில தேஷ்முக் சாலை என வச்சிருக்காங்க தமிழகத்துல…  தலைநகர்ல யாருக்காது தெரியுமா டா ?  தேஷ்முக் அப்படின்னா யாருன்னு..? எந்த தெருல நின்னு முக்குனான் தெரில, என்னவோ ஒன்னு…

வ.உ.சிக்கு தெரு, சுப்புராயருக்கு தெரு, பன்னீர்செல்வத்துக்கு தெரு, ஆனால் கே.கே.கே நகர். கலைஞர் கருணாநிதிக்கு நகர். எம்.ஜி.ஆர் -க்கு நகர், ஜெயலலிதாக்கு நகர். அந்த நகருக்குல எங்களுக்கு ஒரு தெரு. நாங்க என்ன பன்றோம் ? நீ இங்கிட்டு நகரு… தம்பி நான் எதுக்குமே பயப்பட மாட்டேன். அஞ்சுவதும்,  அடிபணிவதும் தமிழன் பரம்பரைக்கே கிடையாது. பயம் என்பது கோலைகளின் தோழன். வீரனின் எதிரி. எந்த வீரனும் கண்ணீரை யேந்தமாட்டான். கண்ணீர் கோலைகளின் ஆயுதம். எப்படி இருக்கு பாருங்க ?

கொஞ்ச நஞ்சமா.. எங்கள் திருநாட்டில்,  எங்கள் நல்லாட்சியே…  நாடு அப்படினு பாடி இருக்கலாம்….. நல்லாட்சி அப்படினு பாடி இருக்கலாம்..  நாடு என பாடி  இருக்கலாம்…. ஆட்சி என பாடி இருக்கலாம். எங்கள் திருநாட்டில்… எங்கள் நல்லாட்சி

”பொங்கிடுக வாய்மை பொலிந்திடுக என்றேநீ செங்கதிர் சீர்கையால் பொன்னளிப் பூசிய கங்குல் நிகர்ந்த கருங்குயிலே கூவாயே”

பண்டை பெரும் புகழ் உடையோமா ? இல்லையா ? பாருக்கு வீரத்தை சொன்னோமா ?  இல்லையா ? எண்திசை வாய்மையால் ஆண்டோமா இல்லையா ? அங்குட்டும்,  இங்குட்டும் நரிகளால் தொல்லையா ? எது இந்த திராவிட நரிகள். இது பெரிய தொல்லையா இருக்குது என பேசினார்.