
செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அவங்க மந்திரி சபையில் இருந்தவரு… நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் ராஜன், ஒரு எட்டு மாசத்துக்கு முன்னாடி அவர் சொன்னாரு… டாஸ்மாக்கில் பணம் வருது. ஆனால் எங்க போகுதுன்னு தெரியல ? அப்படி சொன்னாரு. ஒரு நிதி அமைச்சர் அதை சொன்னாரு அப்படின்னா… என்ன அர்த்தம்னு நீங்க புரிஞ்சுக்கணும்.
அதனால இப்போ நேரடியா மக்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் ஆட்சி நடத்த முடியும். அதை நான் செஞ்சு காட்டுவேன், நிச்சயம். அதை செய்யணும் அப்படின்னு சொன்னாக்க… இது மாதிரி வெளியில் போகுதில்ல அதை எல்லாம் நிறுத்தனும், அப்படி நிறுத்தினால் அந்த பணத்தை வைத்து அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் மாசம் சரியா கொடுக்கலாம்.
இப்ப சரியா மாதாமாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போகவில்லை. பத்து நாள் – 15 நாள் ஆகுது. குறிப்பா போலீஸ் டிபார்ட்மெண்ட்ல 20 தேதி ஆகுது. இந்த நிலை எல்லாம் மாற வேண்டும் என்றால் ? இந்த மாதிரி வெளியில போற பணத்தை நிறுத்தி, அதை ஒழுங்குபடுத்தனும். அப்படி செய்தால் ? நீங்க பைக் ஓட்டிட்டு போகும் போது, வண்டிய நிறுத்தி உங்ககிட்ட 500 ரூபாய் பைன் போட வேண்டிய அவசியம் இல்ல, இதெல்லாம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
நிர்வாக திறமை இல்லாத ஒரு அரசாகம் இப்ப நடந்துகிட்டு இருக்கு. நல்ல அதிகாரிகள் இருக்காங்க. ஆனால் அந்த அதிகாரிகள் என்ன செய்ய முடியும் ? ஒரு வாத்தியார் நல்லா இருந்தாதான், புள்ளைங்க நல்லா படிக்கும். அப்படி இருக்கிற கதையில…. யார் என்ன செய்ய முடியும் ? இதுல திமுகவுக்கு வாக்களிச்சதனால தமிழ்நாட்டு மக்கள், ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க. அவங்கள எல்லாம் வெளியில் கொண்டு வந்து நல்லபடியாக வைக்கணும்னா…? எங்களுடைய ஆட்சி வந்தா தான், அதை செய்ய முடியும் என தெரிவித்தார்.