இந்து மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பில் சனாதன இந்து தர்மம் எழுச்சி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்,  நம்முடைய தமிழகத்திலே இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட,  ஒரு அரசியல் மாற்றத்திற்கு வித்திட,  தமிழகத்திலே இன்னைக்கு திமுக ஆட்சி  பொறுப்புக்கு வந்த பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலே இந்து இயக்கங்கள் ஒடுக்கப்படுகிறது, பொய் வழக்குகள் புனையப்படுகின்றது, நசுக்கப்படுகிறது.

தமிழகத்தில் சனாதன இந்து தர்மத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் பேசிய பேச்சு இருக்கு பாருங்க யாருமே ஒத்துக்க மாட்டாங்க. உனக்கு மத நம்பிக்கை இல்லை என்றால் நீ வீட்ட்டுல இரு.

நீ வந்து என்ன பண்ற ? பூமி பூஜை நடக்குது. அந்த பூமி பூஜைல வந்து அர்ச்சகரை.. அந்த பூசாரி நீ எந்திரிச்சு போ என மிரட்டுற. அப்பவே உன் மேல நடவடிக்கை எடுத்திருக்கணும். அது மட்டுமல்ல இப்ப என்ன சொல்றாரு ? பார்வதி – பரமசிவனுக்கு குடும்ப கட்டுப்பாடு பண்ணி இருக்காங்களா என்று கேட்கிறார் ? நான் கேட்கிறேன்.. பார்வதி பரமசிவனுக்கு குடும்ப கட்டுப்பாடு பண்ணி ருக்கான்னு கேட்குறீயே இது  எந்த வகையில் நியாயம். ஒரு கோடி இந்துக்கள் திமுகவில் இருக்கிறேன் என்று சொல்கிறீர்கள், இதை எப்படி அங்க சகிச்சுக்கிட்டு இருக்கீங்க, அது என்னன்னு நமக்கு புரியல என தெரிவித்தார்.