பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தலைவி, தாம் தூம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை கங்கனா ரணாவத் தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கங்கனா சந்திரமுகி 2 படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை முடிக்க போவதாக தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதோடு ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து இருக்கும் ஒரு புகைப்படத்தையும் கங்கனா வெளியிட்டுள்ளார். மேலும் நான் ராகவா லாரன்ஸால் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

நடன இயக்குனராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ராகவா லாரன்ஸ் தற்போது ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார். அவர் நம்ப முடியாத உயிரோட்டமான மற்றும் கனிவான மனிதர். என்னுடைய பிறந்தநாளுக்கான அனைத்து பரிசுகளுக்கும் நன்றி. உங்களுடன் பணி புரிந்தது மிகவும் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.