எப்போதும் காமெடி திரைப்படத்தில் நடித்து வரும் மிர்ச்சி சிவா அடுத்ததாக அவரது நடிப்பில் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிரபல சேனலுக்கு மிர்ச்சி சிவா அளித்த பேட்டி ஒன்றில் ஒரு வேலை நான் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்திருந்தால் நயன்தாரா அந்த படத்தில் நடித்து இருப்பாங்களா என்று தெரியாது. நயன்தாரா நடிக்கவில்லை என்றால் விக்னேஷ் சிவனுக்கு காதல் ஏற்பட்டு இருக்குமா? அவங்க காதலிக்க நானும் ஒரு வகையில் காரணம். அதற்கு அவங்க இரண்டு பேரும் நன்றி சொல்லணும் என சிவா ஜாலியாக பேசினார்.