செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் டி.ராஜேந்தர்,   இந்தி பிரச்சார சபாவில் நான் இருக்கிறேன்னு சொன்னாக்கா….  இன்னைக்கு இது கொடுக்கிறேன் என்றால்,  நான் இன்னைக்கு புதுசா குடுக்கல….  நான் வந்து 1980ல் ஒரு தலை ராகத்தில் உதயமானவன்.  நான் உதயமான படம் ஒரு தலை ராகம்…  அது ஒரு தலை. இன்னைக்கு என் பையன் நடிச்சது 10 தல.  அந்த பத்து தல நடுச்சி இன்னைக்கி என் பையனோட பிறந்தநாள் இந்த ஸ்டேஜ் வரை என் வாழ்க்கை ஓட்டி பாக்குறாங்க…

என்னோட  ரெக்கார்டு… எனக்குன்னு ஒரு சின்ன ரெக்கார்டு…. நான் பெரிய ஆள் கிடையாது… ஆனால் நான் அத்தனை படங்கள் எடுத்து, அத்தனை படங்களுக்கு மியூசிக் பண்ணி, கஷ்டப்பட்டு, நான் ஒன்னும்  பெரிய ஜமீன்தார் பரம்பரைல இருந்து வந்தவன் கிடையாது. கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கேன்,  இது என்னோட ரெக்கார்டு. இன்னொன்னு அடிப்படையில் நான் இன்னைக்கு கொடுக்கிறேன்னா….  இன்னைக்கு கொடுக்கல,  என்  படம் இறைவன் கொடுத்தான்…. நான் கொடுத்துக்கொண்டே இருந்தேன்… இறைவன் கொடுத்தான்…

உயிர் உள்ள நிஷா, தங்கைக்கு ஒரு கீதம், மைதிலி காதலி,   ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி,  சம்சார  சங்கீதம்,   கூலிக்காரன் படம் ஹிட்டு… ஹிட்டு… ஹிட்டு…  ஆண்டவன் கொட்டினான் வசூலை..அந்நடவன் கொடுத்தான். கொடுத்தவுடன் ஒரு  தாயின் சபதமா ?  படம் வெச்சியா ? வீட்டு வாசலில் கிட்டத்தட்ட பத்தாயிரம் கிலோ,  நல்ல அரிசி.. பச்சரிசி…. என் பச்ச புள்ளைங்க சிலம்பரசன் கையாலும், இலக்கிய கையாலும்  தூக்கி கொடுக்கிறேன்… இதே  வீட்டு வாசல்..  இந்தி பிரச்சார சபா…. அதற்கு ரெகார்ட் இருக்கு என பேசினார்.