தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தற்போது ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து தமன்னா ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் நானும் விஜய் வர்மாவும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தும் அவ்வளவுதான். மற்றபடி இந்த காதல் வதந்திக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. எனக்கு கரீனா கபூர் மற்றும் தபு ஆகியோரை மிகவும் பிடிக்கும். குறிப்பாக தபுவை ரொம்ப பிடிக்கும். நான் அவரை காதலிக்கிறேன். பெண்கள் இந்த வயதிலும் அழகாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் நடிகை தபுவுக்கு தற்போது 50 வயது ஆகும் நிலையில் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.