தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சங்கர். தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான வெற்றியை பதிவு செய்து தற்போது பிரம்மாண்ட இயக்குனராக சங்கர் வலம் வருகிறார். இந்நிலையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 4 படங்களை நடிகர் அஜித் ரிஜெக்ட் செய்ததாக தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன், ஜீன்ஸ், சிவாஜி மற்றும் எந்திரன் ஆகிய 4 படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த 4 படங்களும் நடிகர் அஜித்துக்காக உருவானதுதானாம்.

ஒவ்வொரு முறையும் சங்கர் படத்தின் கதை சொல்லும்போது நடிகர் அஜித் ஒவ்வொரு காரணத்தை சொல்லி சங்கர் படத்தில் இருந்து விலகி விட்டாராம். பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் நடிக்க பலரும் போட்டி போடும் நிலையில் நடிகர் அஜித் சூப்பர் ஹிட் ஆன 4 படங்களின் கதையை ரிஜெக்ட் செய்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தகவலை மூத்த பத்திரிக்கையாளரான பாலு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.