தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வலம் வருபவர் தமன்னா. இவர் தற்போது ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக அண்மை காலமாகவே தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காதல் குறித்த தகவல்களுக்கு நடிகை தமன்னா தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் விஜய் வர்மாவுடன் சேர்ந்து ஒரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன். அதற்குள் அவரை காதலிக்கிறேன் என்று தகவல்கள் பரவுகிறது.
இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். நடிகர்களை விட நடிகைகளுக்கு தான் அதிக அளவில் திருமண வதந்திகள் வருகிறது. அது எதற்காக என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கு ஏற்கனவே டாக்டர், தொழிலதிபர் என பலருடன் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். எனக்கு இனி உண்மையாகவே திருமணம் நடந்தாலும் அதை ரசிகர்கள் நம்புவார்களா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இதன் மூலம் நடிகை தமன்னாவின் காதல் வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.