உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடந்த திகிலூட்டும் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50 வயதான விவசாயி ஹர்தேவ் சிங் என்பவர் தனது மனைவி லக்ஷ்மி தேவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவரது பெயரில் 25 ஏக்கர் நிலம் உள்ளது.
आगरा के खंदौली थाना क्षेत्र में पत्नी के कहने पर भाइयों ने पति हरदेव का फिल्मी अंदाज़ में अपहरण कर लिया
◆ उसके हाथ-पैर बांधकर कार की डिक्की में डाल दिया गया, लेकिन परिवार वालों ने पीछा कर अपहरणकर्ताओं को पकड़ लिया
◆ संपत्ति विवाद को कारण बताया जा रहा है, पुलिस ने दो लोगों को… pic.twitter.com/IOawE90TUj
— News24 (@news24tvchannel) September 5, 2025
அந்த நிலத்தை விற்று மனைவியின் சொந்த ஊரில் குடியிருக்க வேண்டுமென மனைவி வற்புறுத்திய நிலையில், கணவர் மறுத்ததால், மனைவி தன் சகோதரர்களுடன் சேர்ந்து கணவரை கடத்தியிருப்பது போல இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வியாழக்கிழமை காலை 9 மணியளவில், லக்ஷ்மி தேவியின் சகோதரர்கள் ராஜ்பால், சத்யபால் சிங், தரம்பால் சிங் ஆகியோர் இரு நண்பர்களுடன் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது பிரார்த்தனை செய்து கொண்டிருந்த ஹர்தேவை தாக்கி, அவரது வாயில் துணி திணித்து, கார் டிக்கிக்குள் வைத்து கடத்தியுள்ளனர். இதைக் கண்ட அண்டை வீட்டார் சஞ்சீவ் மற்றும் சேதன் இடையூறு செய்ய முயன்ற போது, அவர்களுக்கும் மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் கிராம மக்கள் அந்தக் காரை 5 கி.மீ. தொலைவில் முற்றுகையிட்டு நிறுத்தினர். காரின் டிக்கியில் இருந்து மயங்கிய தெரியாத நிலையில் ஹர்தேவை மீட்டனர். ராஜ்பால் மற்றும் சத்யபாலை போலீசார் கைது செய்துள்ளனர்.
மற்றவர்கள் தப்பி ஓடியுள்ளனர். ஹர்தேவின் உறவினர் சதேந்திரசிங் கூறியதன்படி, இந்த கடத்தல் லக்ஷ்மி தேவி திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது ஹர்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, கடத்தல் வழக்கில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
