சாலையோரம் வாழைப்பழம் விற்றுக்கொண்டிருந்த மத்திய வயது பெண்ணுக்கு வாடிக்கையாளர்களே வராததால், அவர் ஏமாற்றமடைந்து கண்ணீர் வடித்தார்.

அப்போது வந்த இளைஞர் ஒருவர் அவரது வாழ்க்கையையே ஒளியேற்றினார். இந்த உணர்வுப்பூர்வமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மனிதநேயத்தின் அழகிய பிம்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

வீடியோவில், இளைஞர் சிரித்தபடி பெண்ணிடமிருந்து அனைத்து வாழைப்பழங்களையும் வாங்குகிறார். முதலில் ஆச்சரியப்பட்ட பெண், பணம் பெற்றதும் மகிழ்ச்சிக் கண்ணீர் வடிக்கிறார்.

அதோடு நில்லாமல், இளைஞர் அவருடன் அமர்ந்து உணவு உண்கிறார், கூடுதல் பணம் கொடுத்து அடுத்த நாளும் கடை போட உதவுகிறார்.

இறுதியில், வாங்கிய பழங்களை மீண்டும் பெண்ணிடமே திருப்பிக் கொடுத்து, “இன்று உன் உழைப்பு வீணாகாது” என்கிறார். இந்தக் காட்சிகள் இணையவாசிகளின் இதயத்தைத் தொட்டுள்ளன.

கருத்துகளில், “மற்றவரின் வலியை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது, எப்போதும் அன்பாகவும் இரக்கமாகவும் இருங்கள்” என பலரும் உருக்கமாக பகிர்ந்துள்ளனர்.