புனேவைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவருடைய தடையம் செய்யவிருந்த மணமகள் சியா கோயல் மற்றும் அவருடைய காதலன் சேத்தன் சௌத்ரி ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டு மேகாலயாவில் சோனம் ரகுவன்ஷி என்ற பெண் தன் காதலனுடன் சேர்ந்து கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்த வழக்கை சியா கோயல் இணையத்தில் தீவிரமாக ஆராய்ந்துள்ளார். சோனம் செய்த தவறுகளையும், அவர் காவல்துறையிடம் எப்படி மாட்டிக்கொண்டார் என்பதையும் படித்துத் தெரிந்துகொண்ட சியா, அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தங்களின் கொலையை மிகவும் திட்டமிட்டு அரங்கேற்ற நினைத்ததாகப் புனே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் சியாவிற்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாததால், லோனாவாலா அருகில் உள்ள லோஹ்கர்  கோட்டையின் 400 அடி உயரப் பள்ளத்தாக்கு உச்சிக்கு கேதனை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து கேதனை கீழே தள்ளிவிட்டு, அவர் தவறி விழுந்து இறந்துவிட்டார் என்று நாடகமாடி காவல்துறையை நம்ப வைக்க முயன்றார்.

ஆனால், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் சியாவின் மொபைல் தேடல் விவரங்கள் மற்றும் குறியீட்டு வார்த்தைகள் அடங்கிய சாட்டிங்குகள் சிக்கியதால், சோனம் ரகுவன்ஷியின் கொலை பாணியைப் பின்பற்றி சியா கோயல் செய்த இந்தத் திட்டமிட்ட சதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.