பொதுவாக 70 வயது என்றாலே ஓய்வு எடுப்பது, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வு தான் பலருக்கும் நினைவுக்கு வரும்; ஆனால், அந்த ஒட்டுமொத்த பொதுப் புத்தியையும் உடைத்தெறிந்து, 70 வயதில் ஜிம் வாலிபர்களே மிரண்டு போகும் வகையில் வெயிட்லிஃப்டிங் சாதனை படைத்துள்ள பாட்டி ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராமில் ‘weightliftermummy’ என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், அந்தப் பாட்டி சிறிது பயமும், நடுக்கமும் இல்லாமல் மிகத் துல்லியமாக டெட்லிஃப்ட் பொசிஷனை எடுத்து அசால்ட்டாக ‘103 கிலோ’ எடையைத் தூக்கி நிறுத்தி அசத்தியுள்ளார். அவரது முகத்தில் எந்த சோர்வும் இல்லாமல், தன்னம்பிக்கை மட்டுமே நிறைந்திருந்ததைக் கண்டு, ஜிம்மில் தினமும் வியர்வை சிந்தி உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களே தங்களின் வாயடைத்துப் போயுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Devi Sangwan (@weightliftermummy)

“>

தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த அனைவரும் , “பாட்டி நிஜமாகவே கெத்து காட்டிட்டாங்க, சின்னச் சின்ன விஷயங்களுக்கு சாக்கு போக்கு சொல்லும் இன்றைய இளைஞர்களுக்கு இதுவொரு மிகச்சிறந்த பாடம்” என்று தங்களின் பாராட்டு மழையைக் குவித்து வருகின்றனர்.