அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு “ஒன்று பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் காரியத்தை முடித்துவிடுவோம்” என்று புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

மேலும் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கிய நிலையில், கடந்த மாதம் இரு நாடுகளும் தற்காலிக அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதனால் தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ள போதிலும், டிரம்ப் தொடர்ந்து ஈரானை எச்சரித்து வருகிறார்.

இதனால் சமீபத்தில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் ஜூலை 3 முதல் சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. இந்த இறுதி ஊர்வலத்தில் ஈரானிய தலைவர்கள் மற்றும் மதகுருமார்கள் பெருமளவில் கூடியிருந்ததை சுட்டிக்காட்டிய டிரம்ப், அது தங்களுக்கு ஒரு ராணுவ வாய்ப்பாக இருந்தபோதிலும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஆட்கள் தேவை என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அங்கு கூடியிருந்த மக்களின் கண்ணீர் “போலியானது” என்றும் அவர் விமர்சித்துள்ளார். டிரம்பின் இந்த கடுமையான விமர்சனத்திற்கு ஈரான் தரப்பில் இருந்து தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது சமூக ஊடகப் பக்கத்தில், ஜூலை 4 அன்று தனது 250-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய அமெரிக்காவிற்கு “நாகரிகமோ, வரலாறோ அல்லது கண்ணியமோ” கிடையாது.

இந்நிலையில் கமேனியின் மறைவுக்கு மக்கள் காட்டும் உண்மையான துக்கத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்று சாடியுள்ளது. மேலும், “மனிதர்களைக் கொல்லலாம், ஆனால் அவர்களின் கொள்கைகளைக் கொல்ல முடியாது.

இதனால் நீங்கள் ஆயதுல்லா கமேனியைக் கொன்றதன் மூலம் ஒரு நறுமணப் பாட்டிலை உடைத்துவிட்டீர்கள், அதன் வாசம் இப்போது எல்லா இடங்களிலும் பரவிவிட்டது” என்று ஈரான் தூதரகம் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் தற்காலிக அமைதி ஒப்பந்தம் போடப்பட்ட பின்னரும் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.