எகிப்தின் மேற்குப் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள ‘மெரினா எல் அலமீன்’ என்ற இடத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் வியக்கத்தக்க கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். சுமார் 1,700 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலைவன மணலுக்குள் புதைந்து கிடந்த ஒரு பழங்கால ‘பேய் நகரம்’ தற்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அகழ்வாராய்ச்சியின் போது அங்கிருந்த ஒரு பழங்காலக் கல்லறையைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள், அங்குள்ள மனிதக் எலும்புக்கூடுகளைக் கண்டு பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர். அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் வாய்க்குள் தங்கத் துண்டுகள் வைக்கப்பட்டிருந்ததே விஞ்ஞானிகளின் இந்த வியப்பிற்கு முக்கியக் காரணமாகும்.

இதனால் பழங்கால எகிப்தியர்களின் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின் ஒரு பகுதியாக, இறந்தவர்களின் ஆன்மாக்கள் மறுஉலகிற்குப் பாதுகாப்பாகச் செல்வதற்காக இவ்வாறு வாயில் தங்கம் வைக்கும் சடங்கு பின்பற்றப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் இந்த அரிய கண்டுபிடிப்பு, எகிப்தின் பண்டைய நாகரிகம் மற்றும் அவர்களின் இறுதிச்சடங்கு முறைகள் குறித்த புதிய வரலாற்று உண்மைகளை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.