பொதுவாக மரங்கள் மனிதர்களுக்கு அதீத நன்மைகளை தருகிறது. தற்போது மரங்களை இரண்டு நிமிடம் கட்டிப்பிடிப்பதால் மன அமைதி மற்றும் மன அழுத்தம் குறைவதாகவும் மேலும் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் வெளிப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் உள்ள முடி குப்பாவில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மரத்தை கட்டிபிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டிப்பிடித்தனர்.
இரண்டு நிமிடங்கள் மரத்தை கட்டிபிடித்தபடியே அனைவரும் நின்றனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது, அந்த நடைமுறை தங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளனர்.
மேலும் மரத்தை கட்டிப்பிடிப்பதால் ஒரு விதமான மன அமைதி கிடைப்பதாகவும் கூறியுள்ளனர். இதனை அடுத்து பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், மரங்களை கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறைகிறது.
எனவே வாரம் ஒருமுறை மரத்தை கட்டிபிடிக்கும் நிகழ்ச்சி பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை ஆந்திராவில் உள்ள மற்ற பள்ளிகளிலும் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என கூறினார்.
