குடியரசு துணைத் தலைவர் ஆன ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஓய்வு குறித்து நிகழ்ச்சியில் பேசியதை அடுத்து உடனே அவர் தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஜெகதீஷ் தன்கர் குடியரசு துணை தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்பட்டவர்.
On 10th July, 2025, during an event at JNU, Former Vice President Jagdeep Dhankhar remarked that he would remain in office until August 2027, ‘subject to divine intervention.’
What led to his sudden resignation just 11 days later? pic.twitter.com/gRY9ufGU9x
— Aditya Goswami (@AdityaGoswami_) July 21, 2025
அதனால் மாநிலங்களவைத் தலைவர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். அவரது உடல்நிலை காரணம் கருதி இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என கூறப்படுகிறது. அவரது கடிதத்தை குடியரசுத் தலைவரும் ஏற்றுக்கொண்டு உள்ளார் என உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனிடையே சமூக வலைதளங்களில் கடந்த ஜூலை 10ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெகதீஷ் தன்கர் “நான் வரும் ஆகஸ்ட் 2027 இல் ஓய்வு பெறுவேன். தெய்வீக தலையிட்டால் அது மாறலாம்”என தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அடுத்த 10 நாட்களில் அவர் திடீர் ராஜினாமா செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
