தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அருகே குடவாசல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பெரம்பலூர் வேளாண் கல்லூரி மாணவிகள் நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது பச்சை இலை வண்ண அட்டை பற்றியும் அதை பயன்படுத்தும் முறை குறித்தும், நெற்பயிர்களின் பச்சை நிறம் எந்த அளவிற்கு இருக்க வேண்டும். குறைவாக இருந்தால் உரம் இடுதல். மேலும் பூச்சி தாக்கம் இருந்தால் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் போன்றவற்றை படத்துடன் செயல் விளக்கம் செய்து காண்பித்துள்ளனர்.

இதனையடுத்து  விவசாயிகளின் கேள்விகளுக்கு பச்சை இலை வண்ண அட்டையை கொண்டு களப்பணியில் செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாண் கல்லூரி மாணவிகள் சிந்து லட்சுமி, சுபிக்ஷா, சுபத்ரா, சுஜிதா, சுகன்யா, சுருதி, சுமித்ரா, யாழினி, செரின் ஆகிய மாணவிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்துள்ளனர்.