நியூடெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த கொடூரம், அப்பகுதி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு 2 மாத நாய்க்குட்டியை துன்புறுத்தி கொன்றதாக ஒரு நபர் மீது புகார் எழுந்தது. தகவல் அறிந்ததும் மக்கள் அந்த நபரை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைக்கும் முன் கொடூரமாக தாக்கினர். இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
https://www.instagram.com/reel/DPo0WZ4iMya/?igsh=MTU5NWZncXVobGk3Mg==
வீடியோவில், குற்றம் செய்ததாக கூறப்படும் நபர் மீது மக்கள் தாக்குதல் நடத்தும் காட்சி பதிவாகியுள்ளது. அப்போது, அவரின் மனைவி எனக் கூறப்படும் ஒரு பெண் அவரை காப்பாற்ற முயற்சிக்கிறார். பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த நபரையும் அவரது மனைவியையும் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
புகாரின்படி, குற்றவாளி நாய்் குட்டியின் கால்களை முறித்து, அதை கொன்றுள்ளார் என கூறப்படுகிறது. இதே காரணமாக பொதுமக்கள் மிகுந்த கோபத்தில் இருந்தனர். இந்த கொடூர செயலுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“இவனை அடிக்கணும், இதுல ஓர் தீர்வு இல்லை. ஆனால் தண்டனை அவசியம்தான்!” என ஒருவர் கூற, “இதைக் கேட்டதோடு மனசுக்கு அமைதி. இனிமே இந்த மாதிரி செய்றவங்களுக்கு பயம் வரட்டும்!” என இன்னொரு பயனர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த சம்பவத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தார்களா என்பது தொடர்பாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.
