உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகர் மாவட்டத்தில் கர்வா சௌத் பண்டிகையின் ஒரு துயரச் சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளானது. மொஹம்மத்பூர் பகுதியில் வசித்து வந்த புரான் சிங் (72) மற்றும் அவரது மனைவி சமேலி தேவி (70) ஆகியோர் ராம்காட் பகுதியில் கங்கை நதிக்கரைக்கு சென்ற அவர்கள், அங்கேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதனால் பகுதி மக்கள் மட்டுமல்லாமல் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கினர்.

குடும்பத்தினரின் கூற்றுப்படி, இந்த தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்ப தகராறுகள் ஏற்படுவதாகவும், அதேபோன்று வெள்ளிக்கிழமை காலையிலும் சிறிய தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, புரான் சிங் தனது மனைவியை “கங்கை ஆற்றுக்கு செய்யலாம்” என அழைத்துச் சென்று காலை 10 மணியளவில் நதிக்கரையில் விஷம் குடித்துள்ளார். முதலில் மனைவிக்கு விஷம் கொடுத்த பின்னர், தானும் அருந்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபரத்தை அறிந்த ராம்காட் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த நேரத்தில் புரான் சிங் உயிரிழந்து விட்டார், சமேலி தேவி உயிருடன் இருந்தாலும், மருத்துவமனைக்கு அழைத்தபோது பாதியில் உயிரிழந்தார். தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மகன் அஷோக் காசியாபாத்தில் வேலை செய்கிறார். அவர்கள் தங்கள் மருமகள் மற்றும் மூன்று பேரக்குழந்தைகளுடன் குடியிருந்தனர். இந்த துயரமான நிகழ்வின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.