திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு டவுன் பகுதியில் விநாயகம் மற்றும் விஜயா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். விநாயகம் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும், குடிக்க பணம் கேட்டு மனைவி விஜயாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். ஒரு சமயத்தில் விநாயகம் மற்றும் விஜயாவுக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த விஜயா, காய்கறி வெட்டும் கத்தியால் விநாயகத்தின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் செய்யாறு டவுன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கணவர் விநாயகத்தைக் கொலை செய்த பின்னர், விஜயா போலீஸின் 100க்கு அழைத்து சம்பவம் குறித்து தெரிவித்து சரணடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், விநாயகத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, விஜயாவைக் கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.