ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனையாக முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த கர்நாடக அணியை எதிர்கொண்ட ஜம்மு காஷ்மீர் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எளிதில் வெற்றி பெற்றனர்.
இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து அந்த மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. ஜம்மு காஷ்மீர் அணியின் இந்த அசுர வளர்ச்சியைப் பாராட்டி பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் களத்தில் முத்திரை பதித்த ஜம்மு காஷ்மீர் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா இரண்டு கோடி ரூபாய் ரொக்கப்பரிசு அறிவித்துள்ளார். முன்னதாக இறுதிப்போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு நேரில் சென்ற முதல்வர் வீரர்களைச் சந்தித்து உற்சாகப்படுத்தினார்.
மாநில வரலாற்றில் விளையாட்டுத் துறையில் கிடைத்துள்ள இந்த மிகப்பெரிய கௌரவத்திற்காக முன்னாள் வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் ஜம்மு காஷ்மீர் அணிக்குத் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
